Oct 15, 2010

சந்தோஷி நினைவுகள்...


காதலை எப்படி சொன்னாலும் நல்லா இருக்கும். அது போல் காதல் கதையும் எத்துனை முறை மாத்தி மாத்தி சொன்னாலும் நல்லா தான் இருக்கும், இருக்கணும் என்ற நம்பிக்கையில்.....

நான் இங்கு பகிர போவது கதையல்ல நிஜம் என்று சொல்லவில்லை... நிதர்சன கற்பனை என்று வைத்துக்கொள்ளலாம்.





நாளை என்பது விடிந்தால் தான் உண்மை என்ற கொள்கையில் திரிபவன் தான் நமது ஹீரோ. அழகு இல்லை, படிப்பு இல்லை,எதிர்பார்ப்பு இல்லை, முக்கியமா கையில் காசு கூட இல்லை.. ஆனால் நண்பர்கள் அதிகம். (நல்ல நண்பர்களா என்றெல்லாம் ஆராய கூடாது). ஆனாலும் ஒரு சந்தோசமான வாழ்கையை வாழ்பவன்.

ரொம்ப shy டைப் ஆசாமி, சுருங்க சொன்னா கண்ணீர் விடுவது கூட தண்ணீருக்குள் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கரையை தேடும் கப்பல் போல்,அவனது பயணத்தில் வந்து போனது பல அனுபவங்கள்.ஆனால் அன்று அவனுக்கு கிடைத்த இடம் சொர்க்கமோ என்று நினைக்கும் அளவு, அடங்கி கிடந்த அணுக்களெல்லாம், திமிறி எழுந்த இடம். ஒரு கணம் திகைத்து, மறுகணம் வாஸ்கோட காமாவின் அப்போதைய மகிழ்ச்சி எழுந்து மறைந்தது.

இது எனக்கான இடம் என்று மனது சொல்ல ங்கு ஆரம்பமானது அவன் வசந்த காலம். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைவெளி இல்லாமல் வெற்றிடத்தை மட்டும் பார்த்த அவனது கண்களுக்கு, அவளை முதன் முதலில் பார்த்த இடம் அவனை சிலிர்த்து எழ வைத்தது.





இலக்கில்லாத பயணத்தில், வழித்துணையாய் மட்டும் இல்லாமல், வாழ்க்கை துணையாய் வர, இதோ உன் கண்முன்னே ஒருத்தி ன்று அவனது ஏழாவது அறிவு அவனுக்கு உணர்த்தியது...
...தொடரும்

பி . கு : காதல் கதை எழுதுவதில் இது எனது முதல் முயற்சி... நல்லா இருக்கு என்று, உங்கள் ஆதரவு இருந்தால் தொடரும்....

1 அர்ச்சனை:

sakthi said...

சிம்பா,
என்ன காதல் சோகம் உங்களையும் பிடுசுருச்சா.வாழ்க ,
காதலுடன் ,(ஆரம்பத்திற்கு )
கோவை சக்தி .