Feb 8, 2010

ஊர் கூடி..

எந்த நேரத்துல இந்த பழமொழி சொன்னங்க என்று எனக்கு தெரியலை, ஆனா இதன் உள்அர்த்தம் ஒவ்வொரு நிகழ்விலும் எனக்கு உணர்தபடுகிறது. ஒவ்வொரு சின்ன விடயமாகிடும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட என்ற விகுதியே எஞ்சி நிற்கிறது(அக்காரியத்தை நிறைவேற்ற)..

ஒருவன் அல்லது நான் என்ற நிலையை தாண்டி சிந்திக்கும் பொழுது எல்லாம் நம் கை கூடி வரும் நிலை. ஒரு காரியம் நிறைவேறினால், எனக்கு கிடைக்கும் லாபம் என்று பார்ப்பதை விட, நமக்கான லாபம் என்று பார்த்தால் அதன் வேகம் கூடுகிறது. அது தனிஒருவன், குடும்பம், தெரு, ஊர், நகர், நாடு என்று ஒவ்வொரு நிலைக்கும் பொருந்துகிறது.

ஊரோடு ஒத்து வாழ்பவன் மனிதன், ஊரையே தான் வழிக்கு மாற்றுபவன் தலைவன். ஆனால் தலைவன் ஆவது அவ்வளவு சுலபம் இல்லை. ஊரை மட்டும் அல்ல உலகையே தன்வழிக்கு மாற்றிய வல்லமை ஹிட்லருக்கு வேண்டுமானால் சரிவரும்.... நமக்கோ????

குறை சொல்வது ஒன்றையே குறியாக கொண்டு பதிவுகள் இட்டு வரும் குழுவை சுட்டவே இந்த பதிவு. அவர்கள் மாற வேண்டும்.. சம்பந்தமே இல்லமா எதுக்கு இந்த நேரத்தில் இந்த பதிவு என்று யோசிக்காதீங்க..

அதோடு பின்நவீனத்துவம் என்றால் இப்படி தான் இருக்குமோ (யாருக்கும் புரியாமல்). அப்படி இந்த பதிவை படிச்ச ஒருவருக்கும் எதுவும் வெளங்கலை என்றால் Almost I have Succeded in my Mission. :)))


3 அர்ச்சனை:

ஸ்வர்ணரேக்கா said...

mission failure.
எனக்கு மேட்டர் புரிஞ்சிருச்சு..

சிம்பா said...

ரேகா உங்களுக்கு மட்டும் புரிஞ்சிருக்குனா, அனேகமா அதில் எதோ உள்குத்து இருக்கு... ஹி ஹி

தாரணி பிரியா said...

என்னாச்சு அருண்