Feb 3, 2010

4 சாப்பாடு விலை 50,000 ருபாய்

என்னங்க தலைப்ப பார்த்தா சும்மா அதிருதில்ல... மேட்டர் இருக்கு, பொறுமையா முழு பதிவையும் படிங்க... உண்மை புரியும்...


போன வாரம் சனிக்கிழமை வள்ளலார் தினம்னு சொல்லிட்டு சரக்கு கடைக்கு எல்லாம் லீவ் விட்டுடாங்க.. அதே நாளில் நாங்க நண்பர்கள் நாலு பேரு சந்திச்சோம். அதில் ஒருவர் அவருக்கு இருந்த செல்வாக்கை வச்சு (இங்கேயுமா), மேட்டர் ரெடி செஞ்சார் . ஆக சரக்கு கைல இருக்கு, அடிக்க இடம் தேடனுமே.. எல்லோரும் hollow mode ரவுண்டு கட்டி நின்னு கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். கார் எடுத்து நகரை விட்டு வெளியேறி ஓரிடத்தில் சரக்கடித்து, சாப்பிட மட்டும் அருகில் இருக்கும் நல்ல கடைக்கு போவோம் என்று.

சரக்கு அடிக்கிற வரை எல்லாம் சரியா தான் நடந்தது, அதன் பிறகு வண்டியை செலுத்திக்கொண்டிருந்த பொழுது, காருக்குள் நடந்த கலோபரத்தில், நிலைதடுமாறி எதிரே வந்த லாரியை தவிர்க்க எண்ணி வண்டியை ஓட்டிய நண்பர் வேகமா செயல்பட்டார், அப்பொழுது சிறிதளவு சாலையை விட்டு கீழிறங்கிய வண்டி, நிறுத்த எத்தனித்த நேரத்தில், ஆளில்லாமல் தனியாக நின்றுகொண்டிருந்த மொபட் மீது மோதிவிட்டது. அந்த சமயம் ஏற்பட்ட பதட்டத்தில், அந்த இடத்தில் குழுமிய மக்களின் கொலைவெரிக்குரளுக்கு பயந்து, வாகனத்தை நிறுத்தாமல் நண்பர் செலுத்தி விட்டார்.

ஆன் வழியில், நாங்கள் தேடி சென்ற கடையும் (ஆட்டோட தலையில் இருந்து கால் வரை தனி தனியாக சமைத்து சுவையாக பரிமாறும் இடம்) கண்ணில் பட, உடனே நண்பர் அந்த உணவகத்தினுள் வண்டியை செலுத்திவிட்டார். நாங்கள் நால்வர் (நண்பர் 1,2,3,4) என்று வைத்துக்கொள்ளுங்கள். அனைவரும் உணவருந்த அமர்ந்தோம். எதிர்பார்த்து சென்ற அனைத்து வகைகளும் இலையில். நல்ல பசி வேறு, வழியில் நடந்த சம்பவத்தை மறந்து உணவில் கைவைத்த வேளையில், உணவகத்தின் வெளியே ஒரே கூச்சல்.மாப்ள நாம தேடி வந்த வண்டி வகையா மாட்டிக்கிச்சு, எல்லோரும் இங்கே வாங்கடா என்று.

அப்பொழுது ரத்த பொரியலை சுவைத்துக்கொண்டிருந்த என் மனதில், வெளிய போனா இப்படி தான் நம்ம நிலைமையுமா என்று நினைப்பு தான். இருந்தாலும் உணவின் சுவை, வேறு எதை பற்றியும் நினைக்காமல் சுவைக்க வைத்தது, அதே சமயம் என்னுடன் வந்த நண்பர் 1,2 இருவரும் அவசரமாக இலையை மடித்து விட்டு எழுந்தனர். சரி வெளிய போய் பஞ்சாயத்து பேச போராங்களோ என்று நினைத்து நானும், நண்பரும் அமைதியாக இருந்தோம். (நமக்கு ஒரு வேலை மிச்சம்ல), ஆனால் நாங்கள் உணவருந்தி எழுந்த பின்பு தான் தெரிந்தது, அவங்க பஞ்சாயத்து பேச போகல, பஞ்சா பறந்து போய்ட்டாங்க என்று.

சரி ஆனது ஆகட்டும் என்று நினைத்து நானும் நண்பரும் வெளியே சென்றோம். அப்பொழுது நண்பர் சமாதனம் பேச முயன்று, முடிவில் அது கைகலப்பு ஆகிவிட, நண்பர் விட்ட குத்தில், எதிர் ஆசாமி தாடை வீங்கியது. அப்பொழுது சைடு இருந்து ஒரு குரல், டேய் நம்ம தலைவர் மேலையே கை வச்சுடாங்கடா என்றது. என்னது நீ தான் தலைவனா, என்ற ரீதியில், நண்பர் விலக, இடையில் புகுந்த நான் எதோ உளற, அந்த கேப் நண்பர் எஸ்கேப் ஆகி, சும்மா PT உஷா ரேஞ்சுக்கு காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, எனக்கு செல்பேசியில் அழைத்தார்.

தம்பி அங்கே இருந்து எப்படியாவது அப்பிட்டாகிடு, இல்லனா சங்கு தான் என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். நானோ, இங்கே இருந்து ஓடனும்னா கூட எப்படியும் 5 மைல் வருமே, என்று சத்தமில்லாமல் நகர்ந்தேன். ஆனா பாருங்க, அந்த சமயம் பாத்து, அம்புட்டு பயக கண்ணும் நம்ம மேல தான் இருக்கு. ஒரு வழியா சூனா.பானா ரேஞ்சுக்கு களத்தில் இறங்கி அம்புட்டு பயலையும் சமாளிச்சு, பஸ் ஸ்டாண்டு வரக்குள உசுரு போயிருச்சு.

அன்னைக்கு பறந்த நண்பர்களை(1,2) அடுத்த நாள் மாலை தான் பார்த்தேன். அட ஓட்டிட்டு வந்த வண்டியை கூட விட்டு ஓடிடாங்கப்பு. அத எடுத்து வர மீண்டும் அதே ஊருக்கு போனதும் தான் தெரிந்தது, வண்டி மட்டும் தான் நின்னுட்டு இருக்கு, உள்ள இருக்கதெல்லாம் உருவிட்டு போய்டாங்க என்று.

ஒரு வழியா, கண்ணியமான காவல் துறைக்கு கப்பம் கட்டுவதில் ஆரம்பித்து, நஞ்சு போன வண்டியை நல்லா மாத்தும் வரை ஆனா செலவுகளை சேர்த்து பார்த்தா, சும்மா ஐம்பதை தாண்டுது. அப்போ, நான் நம்ம நண்பரிடம் (1), எல்லாத்தையும் கணக்கு எழுதுவீங்க, இந்த செலவை என்னான்னு.... என்று இழுத்தேன், உடனே நண்பர் வேற என்ன எழுத முடியும், நாலு சாப்பாடு 50,000 ரூபாய்னு தான் என்றார், ஒரே சோக மயமாக.

ஆக மக்களே, இப்படி 50,000 ருபாய் சாப்பாடு, சாப்பிட ஆசை இருந்தா எங்க மாதிரி பண்ணுங்க. இல்ல நல்ல படியா நம்ம ஊரு டிராபிக் விதிகளை பாலோ பண்ணுக.

மறுபடி சிந்திப்போம்.

12 அர்ச்சனை:

அன்புடன் அருணா said...

ஹாஹாஹாஹா! Rates are too high! :)

Rajalakshmi Pakkirisamy said...

aaha...

Anonymous said...

அப்ப எங்க தலைவர அடிச்சது நீ தானா??...

Cable Sankar said...

:(

SARAVANAN said...

THANNI ANDINGA, ANNA ADIVANGANTHA
ALAVKU THALLIPOI ADINGA. SAPADU ELLAM MUNKOTIYA EDUTHTHUTU POI ERUKALAM. ETHAYUM PLAN PANNI PANNANUM........ VADIVELU STYLIL. ETHU EPIDIYO 50000 MOI VACHACHI. ADUTHA THADAVA CAREFULLA ENJOYU PANNUNGA THALAIVA.

SARAVANAN said...

THANNI ADINGA ANA ADIVANGATHA ALLAVUKU THALLI POI ADINGA. ETHU EPADIYO 50000 MOI VACHACHU VADIVELU STYLEL ETHAYUM PLAN PANNI SEIYANUM/.

SARAVANAN said...

OK THALAIVA 50000 MEALS RATE ELLAI VALLKAI UNDERSTAND PANNIKA ENDUR NINAITHU KOLLAVUM.

சிம்பா said...

அருணா அக்கா ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீடு பக்கம் வரீங்க.. :)

சிம்பா said...

raji :)

அனானி அவர்களே உங்களை மாதிரியே தலைல துண்டு போட்டிருந்தா எப்படி அடையாளம் பார்க்க முடியம் ;)

சிம்பா said...

சரவணன் முதல் வருகைக்கு நன்றி...

நீங்க சொல்றது சரி தான்.. இந்த பாடம் வாழ்க்கை முழுதும் நினைவில் இருக்கும் :)

sriram said...

நல்லா இருக்கு நீங்க ஹோட்டல்ல சாப்பிட்ட லட்சணம்.

இந்த பதிவ உனா தனா அண்ணாச்சிக்கு அனுப்பி வைங்க, தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்கடான்னு சொன்னா கேக்குறீங்களாடா? இந்த பாழாப் போன தண்ணிய விட்டுத் தொலைங்கன்னு ... க.க.சாமி பின்னூட்டம் போடுவார் :) :)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தாரணி பிரியா said...

கொஞ்சம் சோகமாதான் இருக்கு. செம காஸ்ட்லியான ஆளுங்களா இருக்கிங்களே. டிராபிக் விதியை ஃபாலோ செய்யறதை விட முக்கியம் தண்ணி அடிக்காம வண்டி ஒட்டறது