அநேகமா பதிவுலகின் ஜாம்பவான்கள் இந்த பட விமர்சனத்தை அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு மேஞ்சுட்டங்க. அதுக்குமேல அநேகமா எல்லோருமே ஒன்னுக்கு ரெண்டுவாட்டி படத்தையும் பார்திருபாங்க. இதுக்குமேல சொல்றதுக்கு என்ன இருக்கு, ஆனாலும் எதுவோ ஒன்னு, மனசுல பட்டதை பதிஞ்சு வச்சிடுனு சொல்லுது, செஞ்சிடவேண்டியது தான்.
டெக்னிகல், படத்தொகுப்பு, லொட்டு லொசுக்கு இதுபத்திஎல்லாம் எனக்கு தெரியாது. ரெண்டு மடக்கு காப்பி தொண்டைய நனைச்சாலும், அந்த தித்திப்பு ஒரு நிமிசவாவது நாக்குல நின்னா அது நல்ல காபி. அதே போல தான் படமும். திரையரங்கை விட்டு வெளியேறும் பொழுது, ஏண்டா வந்தோம்ன்னு இல்லாம, ஒரு நிமிசமாவது படக்காட்சிகள் மனத்திரையில் ஓடினால், திருப்பதியா இருக்கு என்று அர்த்தம்.
முதல் பாதி ஓகே. ஆனா ரெண்டாவது பாதி தான், படம் எடுத்த இயக்குனருக்கே என்ன பண்ணனும்னு தெரியலை, வெண்டக்கா பொடலங்கா என்று பலதரப்பட்ட யோசனைகள். ஆல்ரெடி 3.1/2 மணி நேர படம் திரையரங்கு ஆப்ரேட்டர்களின் கைவண்ணத்தால் அரைமணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது, இதுக்குமேல முடிவை எங்கே போய் சொல்றது.
காடு, மலை, கருப்பு சிகப்பு எல்லாத்தையும் விட்டு பார்த்தால், தமிழ் (இப்படியாவது கத்துகிட வேண்டியது தான்), ஆலிங்க தரிசனத்துக்கு மீனிங் தேடுற அளவு தமிழ் மொழி மேலே ஒரு ஈர்ப்பு வருது (கௌரவர்கள் நுறு பேர் எப்படி என்ற நெடுநாளைய கேள்விக்கு ஓரளவு விடை கிடச்சுது). அடுத்து போர் முறை, எதிரிப்படையை ஊடுருவி தாக்குதல், படைகள் சிதறாமல் முன்னேறி, தேவையான சமயத்தில் ஒன்று கூடுதல், ராஜாவை காப்பாற்ற, மனித கேடையங்கள் அமைத்து, உயிர் விடும் சிப்பாய்கள்.
மன்னராக இருந்தாலும், மக்களில் ஒருவன் என்பதை காட்ட, பொதுமக்களில் ஒருவர் ராஜாவின் கன்னத்தில் அறையும் காட்சி, சிறு கண்ணசைவுக்கு கூட பொருள் கண்டு இயங்கும் தன்மை, போட்டியில் வென்ற ஒருவனுக்கு அளிக்கப்படும் மரியாதை, பெண்களின் சம பங்கு (படம் முழுவதும்) என்று சொல்ல எவ்வளவோ இருக்கு.
சரளமா ஆங்கிலத்தில் திட்டி விளையாட கூட முடியும், ஆனால் உயிர் போகும் நேரத்தில் கூட, தமிழ் பேச வராமல் ஆண்ட்ரியா திணறும் காட்சி மிக இயல்பு. போர் முறையை பற்றி பார்த்திபன் (சோழ மன்னன்) குறிப்பிடும் காட்சியில், நிச்சயமாக இலங்கை நிகழ்வு கண்முன் நிழலாடுகிறது. நம்மையும் அறியாமல் மனதில் ஒரு கிலோசம். (ஒருவேலை இதுக்காகத்தான் சங்கர் அண்ணா பதிவில், அவ்வளவு எதிர்ப்புகளோ?).
படத்தின் முடிவில் ஒரு தொடக்கத்திற்கான அடையாளமே தெரிகிறது. அது, இப்படத்தின் வெற்றியை பொறுத்தே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதற்காகவாவது இப்படம் வெற்றியடைய வேண்டும்.

6 அர்ச்சனை:
ம் இரண்டாவது பாதில ஏண்டா வந்தோமோன்னு தோணுச்சே அருண் :). எனக்கு டயலாக் எதுவுமே புரியலை அதாவது கேட்கலை. அத்தனை இரைச்சலான பின்ணனி இசை
தாரணி இதுக்கு ரெண்டு காரணம் சொல்லலாம், ஒன்னு உங்களுக்கு தமிழ் புரியலை, ரெண்டாவது Theater sound effect. அந்த காட்டு காதல் இசையில் தான் ஒரு கூஸ் பெர்ரி பீலிங் கொண்டார பார்த்திருக்கார் மீசிக்டைரக்டர். :)))
நல்ல விமர்சனம் நண்பரே, தொடருங்கள்.
:)
:)
//late(st) ரிவ்வியு//
This itself late a? then what about mine?
hm... unmayil oru nalla muyarchi......
Post a Comment