என்ன தான் தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி அடைந்தாலும், காலையில் தினசரிகளை படிப்பதென்பது தனி சுகம். அதிலும் ஓசி பேப்பர் என்றால், கேட்டகவா வேண்டும். இந்த பதிவு எழுதுவதற்கு டீ கடை மற்றும் அதனை தொடர்ந்து வீட்டில் நிகழ்ந்த ஒன்றே காரணம்.
பொதுவாக காலையில் டீ கடைக்கு சென்றால், கருமமே கண்ணாக அங்கு இருக்கும் தினசரிகளை பலர் பிரித்து மேய்ந்துகொண்டிருப்பர். ஒரு தினசரியை நார் நாராக பிரித்து, குறைந்தது பத்து நபர்கள் படிப்பார்கள். அந்த கலோபரத்தில் எப்படியாவது நாமும் புகுந்து ஒரு பேப்பரை கையில் எடுத்து உட்கார்ந்தால், நமக்கு அருகில் கண்டிப்பாக யாரவது ஒருவர் வந்து அமருவார். முதலில் சிறிதளவு எட்டிப்பார்த்து படிக்கும் படலம் தொடங்கும். பின்னர் சிறிதளவு நெருங்கி வந்து மிகவும் அவசரமாக எதையாவது படிப்பார். மேலும் சில நொடிகள் கடந்தால், மூச்சு காற்று படும் தூரத்தில் அவரது முகம் இருக்கும். இதுக்கு மேல தாங்காது என்று நம் கையில் உள்ள பேப்பரை அவரிடம் குடுத்தால், ச்சே இந்த படம் , பக்கத்துல இருக்க தியேட்டர்ல வராம போயிருச்சே என்று சொல்வார் பாருங்க...
இது கூட பரவாஇல்லை. ஒரு சில கடைகளில், பஜ்ஜியை பில்ட்டர் பண்ண பழைய பேப்பர் வாங்கி வைத்திருப்பார் கடைகாரர், ஆனால் அதை கூட கவனிக்காமல், ஒரு சிலர் மும்முரமாக மூழ்கிவிடுவார். அதோடு நில்லாமல், அண்ணே தங்கம் விலை ஏறப்போகுதமே, என்று சில பல செய்திகளை வேறு பகிர்ந்துகொள்வார்.
கடையை விட்டு வெளியேறும் பொழுது, பழைய நினைவு ஒன்று, நானும் எனது நண்பர்களும் வெளிமாநிலத்தில் தங்கியிருந்த சமயம். ஒரு நாள் காலையில், கடைக்கு போகலாம் என்று (அங்கேயுமா!!) கிளம்பினேன். சீனியர் நண்பர் ஒருவர், தம்பி வரும் போது ஒரு பேப்பர் வங்கி வந்திடு என்றார் என்னிடம். சரி என்று தலையாட்டிவிட்டு, கடைக்கு போய் திரும்பினேன். விடுதி அறையை அடைந்தவுடன் , நண்பர் எங்கே பேப்பர் என்று அவசரமாக கேட்டார்.. அண்ணே தமிழ் பேப்பர் எதுமே இல்ல என்று நான் சொல்ல, நண்பர் டென்ஷன் ஆகி, அட இங்கிலீஷ் பேப்பர் கூட இல்லையா என்றார். நான் சிறிது அதிர்ந்து போய், அண்ணே எப்போல இருந்து இங்கிலீஷ் பேப்பரெல்லாம் படிக்க ஆரம்பிச்சீங்க என்றேன் அப்பாவியாக. அதற்கு அவர், எப்பா நீ வேற , நான் அவசரமா போகணும் என்று ஒரு இடத்தை நோக்கி கை நீட்டினார். (அவர் கை நீட்டிய இடம் கழிவறை). மீண்டும் நான், அங்கே தண்ணி நல்லா தானே வருது என்றேன். அவர் அழுவாத குறையாக, எப்பவும் பேப்பர் படிச்சுக்கிடே போய் பழகிட்டேன். இப்போ பேப்பர் இல்லாம என்ன செய்யிறதுன்னு தெரியலை என்றார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.
இதை நினைத்தவாறே வீட்டுக்கு அருகில் வந்தால், வீட்டுக்கு முன் ஒரே கூட்டம். என்னவென்று வாட்ச்மேனிடம் விசாரித்தால், காலைல பேப்பர்காரன் , பேப்பரை தண்ணி மேல வீசிட்டான். காய வைக்கலாம்னு வெளிய வெயில்ல விரிச்சு வச்சிருந்தேன், தப்பா போச்சு என்றார் கூட்டத்தை பார்த்து...
என்ன இருந்தாலும் பேப்பர் படிக்கிறது தனி சுகம் தான்.

1 அர்ச்சனை:
ம் என்னதான் நியூஸ் கேட்கறது நெட்ல படிக்கிறதுன்னு இருந்தாலும் பேப்பரை கையில வைச்சுகிட்டு அதே செய்தியை படிக்கிறது தனி சுகம்தான் :)
Post a Comment