இந்த தொழிலுக்கு முதலீடு தேவைஇல்லை. பெரிய அளவு இடவசதியோ அல்லது ஆட்களோ தேவை இல்லை. லாபம் என்று கைக்கு வரும் என ஏங்க வேண்டியதில்லை. ஆனால் மாத வருமானம் எப்படியும் ஐந்து இலக்கங்களை தாண்டும்.
லட்சங்களில் பணம் போட்டு, ஆட்கள் கிடைக்காமல், சில நேரங்களில் வேலை இல்லமால், அரசாங்க அலைச்சல், வரி என்று நொந்து நூடில்ஸ் ஆகி வருடத்திற்கு 20% அளவு வருமானம் பார்ப்பது குதிரைக்கொம்பான இந்த காலத்தில் இப்படி ஒரு தொழிலா என்று கேட்காதீர்கள்.

இப்படி ஒரு அருமையான தொழிலின் பெயர் நகை கடன். அதிகபட்ச செலவு, பெயர் பலகை மட்டுமே. இந்த தொழில் நடத்த பதிவு எண் வாங்கிய பின், ஏதாவது ஒரு கூட்டுறவு வங்கியின் மேலாளர் அல்லது பணியாளர், இல்லை என்றால் ஏதாவது ஒரு சிறிய அரசு வங்கி ஊழியர் ஒருவரை கைக்குள் வைத்துக்கொள்வது.
பொதுவாக தனியார் குடுப்பதை காட்டிலும், ஒரு கிராம் தங்கத்திற்கு வங்கிகள் குடுக்கும் விலை அதிகம். ஆகவே உங்களுக்கு கிடைக்கும் அடகு பணம் அதிகம். வட்டி மிகவும் குறைவு. அதே நேரத்தில் நகைகளை பாதுகாப்பாக வைக்க, வங்கிகள் பெட்டக பாதுகாப்பு வசதி , உங்கள் வரவு, செலவு வேலையை வங்கி ஊழியர் பார்த்துக்கொள்கிறார். அதற்கு சம்பளம் கூட சம்பந்தப்பட்ட வங்கிகளே பார்த்துக்கொள்கின்றன.நகைகளை திருப்பி மீட்க, வைக்க, இந்த வேலைக்கு மட்டுமே உங்களுக்கு ஆள் தேவை.
இப்படி லம்ப்பாக ஒரே ஒருவர் மூலம் வேலை முடிவதால், சிறு வாடிக்கையாளர்களை, அதே வங்கி ஊழியர்கள் பைசாவுக்கு கூட மதிப்பதில்லை. கடன் வழங்கும் நேரத்தை காட்டிலும் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் சாமானியனுக்கு கடன் இல்லை. ஆனால் அவர்களின் மதிப்பு மிக்க வட்டி கடை வாடிக்கையாளர் அரைமணி நேரம் தாமதமாக வந்தாலும் ஸ்பெஷல் கவனிப்பு உண்டு.
ஆகவே இப்படி ஒரு அருமையான முதலீடு இல்லாத, மரியாதை நிறைந்த வருமான வாய்ப்பை நாம் ஏன் தவற விட வேண்டும்??
(விடுதி அறையில் நண்பர்கள் சேர்ந்து இருந்த பொழுது, நமது நண்பர் ஒருவர் மூலம் பெறப்பட்ட தகவல் மூலமாக எழுதப்பட்ட பதிவு)
இனி அடகுக்கு வரும் நகைகளை வாங்கி, வாடிகையாளர்களுக்கு பணம் குடுக்க வேண்டும். பிறகு தினமும் வரும் நகைகளை எடுத்துக்கொண்டு, நேராக நம் வங்கி ஊழியர்களை அணுகி, அதே நகைகளை குறைந்த வட்டிக்கு வங்கிகளில் வைக்க வேண்டும்.
பொதுவாக தனியார் குடுப்பதை காட்டிலும், ஒரு கிராம் தங்கத்திற்கு வங்கிகள் குடுக்கும் விலை அதிகம். ஆகவே உங்களுக்கு கிடைக்கும் அடகு பணம் அதிகம். வட்டி மிகவும் குறைவு. அதே நேரத்தில் நகைகளை பாதுகாப்பாக வைக்க, வங்கிகள் பெட்டக பாதுகாப்பு வசதி , உங்கள் வரவு, செலவு வேலையை வங்கி ஊழியர் பார்த்துக்கொள்கிறார். அதற்கு சம்பளம் கூட சம்பந்தப்பட்ட வங்கிகளே பார்த்துக்கொள்கின்றன.நகைகளை திருப்பி மீட்க, வைக்க, இந்த வேலைக்கு மட்டுமே உங்களுக்கு ஆள் தேவை.
இப்படி லம்ப்பாக ஒரே ஒருவர் மூலம் வேலை முடிவதால், சிறு வாடிக்கையாளர்களை, அதே வங்கி ஊழியர்கள் பைசாவுக்கு கூட மதிப்பதில்லை. கடன் வழங்கும் நேரத்தை காட்டிலும் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் சாமானியனுக்கு கடன் இல்லை. ஆனால் அவர்களின் மதிப்பு மிக்க வட்டி கடை வாடிக்கையாளர் அரைமணி நேரம் தாமதமாக வந்தாலும் ஸ்பெஷல் கவனிப்பு உண்டு.
ஆகவே இப்படி ஒரு அருமையான முதலீடு இல்லாத, மரியாதை நிறைந்த வருமான வாய்ப்பை நாம் ஏன் தவற விட வேண்டும்??
(விடுதி அறையில் நண்பர்கள் சேர்ந்து இருந்த பொழுது, நமது நண்பர் ஒருவர் மூலம் பெறப்பட்ட தகவல் மூலமாக எழுதப்பட்ட பதிவு)

7 அர்ச்சனை:
:-)))))))
அட ஙொங்கமக்கா.. இப்படியெல்லாம் வேற நடக்குதா..
உங்களுக்கு நல்ல மனம்தான்.
///பொதுவாக தனியார் குடுப்பதை காட்டிலும், ஒரு கிராம் தங்கத்திற்கு வங்கிகள் குடுக்கும் விலை அதிகம்.///
பெரும்பாலும் தனியார்தான் அதிக விலை கொடுக்கிறார்கள்..!
எப்படி ஆகினும் நீங்கள் சொல்வது போல நல்ல தொழில்தான் ..!
ஒரு லட்ச ரூபாய் வைத்துக்கொண்டு 5,6 லட்ச ரூபாய் அளவிற்கு அடகு பிடிக்கலாம்.!
வட்டிக்கு வட்டியும் ஆச்சு .! பொருளும் பாதுகாப்பாய் இருக்கும் ..!
நல்ல பதிவு அருண் ..!
அன்பு நண்பா சிம்பா,
அடகு நகை தொழில் என்பது அவ்வளவு எளிதான தொழில் அல்ல .சில நேரங்களில் கவரிங் நகையை சில பல தொழில் நுட்ப வேலைபாடு செய்து அடமான கடைகாரரையே நம்பவைத்து தலையில் கட்டிவிடுவார்கள் .அடுத்து திருட்டு தங்கம் தனது தங்கம் என கூறி நம் தலையில் கட்டிவிடுவார்கள்.ஒரு நாள் போலீசுடன் இந்த கடையில் தான் விற்றேன் என்று கூறி விடுவார்கள் .நீங்கள் அடமானம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் போலீஸ் கூறும் எடை நீங்கள் கொடுக்க வேண்டும்.இந்த தொழிலில் அநேகம் பேர் தற்கொலை செய்துகொண்டதும் உண்டு .இது நான் அறிந்த நிதர்சன உண்மை .அடுத்து உங்களுக்கு இத்தொழில் செய்ய மனிதாபிமானம் மனச்சாட்சி இல்லாவிட்டால் ஜெயித்துவிடலாம் .உங்களுக்கு அந்த உயர்ந்த தகுதி உள்ளதா?இன்னும் பல இன்னல்கள் உள்ளன ஆகவே கண்மூடி தனமாக இத்தொழிலில் இறங்கவேண்டாம் என்பது என் தலதா கருத்து....
அன்பு நண்பா சிம்பா,
அடகு நகை தொழில் என்பது அவ்வளவு எளிதான தொழில் அல்ல .சில நேரங்களில் கவரிங் நகையை சில பல தொழில் நுட்ப வேலைபாடு செய்து அடமான கடைகாரரையே நம்பவைத்து தலையில் கட்டிவிடுவார்கள் .அடுத்து திருட்டு தங்கம் தனது தங்கம் என கூறி நம் தலையில் கட்டிவிடுவார்கள்.ஒரு நாள் போலீசுடன் இந்த கடையில் தான் விற்றேன் என்று கூறி விடுவார்கள் .நீங்கள் அடமானம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் போலீஸ் கூறும் எடை நீங்கள் கொடுக்க வேண்டும்.இந்த தொழிலில் அநேகம் பேர் தற்கொலை செய்துகொண்டதும் உண்டு .இது நான் அறிந்த நிதர்சன உண்மை .அடுத்து உங்களுக்கு இத்தொழில் செய்ய மனிதாபிமானம் மனச்சாட்சி இல்லாவிட்டால் ஜெயித்துவிடலாம் .உங்களுக்கு அந்த உயர்ந்த தகுதி உள்ளதா?இன்னும் பல இன்னல்கள் உள்ளன ஆகவே கண்மூடி தனமாக இத்தொழிலில் இறங்கவேண்டாம் என்பது என் தாழ்ந்த கருத்து....
அது மட்டுமல்ல. அடமானம் வைக்கும் போது எடை போட்டு வைக்கிறோம். ஆனால் திருப்பும் போது எடை போட்டு வாங்குவதில்லை.எடை போட்டு வாங்கினால் நிச்சயம் 1 கிராம் காணாமல் போய்விடும். இது வ்ங்கிகளிலும் நடக்கின்றது. மற்றபடி சக்தி சொல்வது போல் சில விஷயங்கலும் நடக்கின்றது. உஷாராக இருக்க வேண்டியது நாம்தான்.
நன்றியுடன்
கனகராஜ்
Post a Comment