Sep 5, 2009

நினைத்தாலே இனிக்கும்

நினைக்க நினைக்க சிரிப்பு தாங்க வருது. படத்தை பார்த்துட்டு பாதியில் வந்தது எத்தனையோ முறை நடந்திருக்கு ஆனா தியேட்டருக்கு போய், படமே பார்க்காம பாதியில் ஓடிவந்தது நேத்து நடந்தது. முழுசா சொல்றேன் கேளுங்க..

ஆறுமணி காட்சிக்கு ரிசர்வேசன் செய்து, அதற்க்கு பிறகு வந்த வேலைகள் காரணமா படத்துக்கு போக கொஞ்சம் லேட் ஆகிருச்சு. (இங்க கூடவா என்று கேக்காதீங்க)...உள்ள போன உடனே பழக்க தோஷம், நம்ம அடுத்த சீட் அன்பர்கிட்ட, அண்ணே படம் போட்டு எவளோ நேரம் ஆச்சு என்று கேக்க.. எட்டு மணி நேரம் ஆச்சு என்று சொன்னார்... கேட்டது என்னோட தப்பு தான் என்று படத்தை பார்க்க ஆரம்பித்தேன். காலேஜ், பசங்க கலக்கல் ஆட்டம் என்று எப்பவும் போல போனது... சிறிது நேரத்திலே எனக்கு செல்பேசியில் அழைப்பு வர, எழுந்து வெளியே சென்றேன். சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் உள்ளே வந்தால், ஒண்ணுமே புரியலை... மீண்டும் பக்கத்து சீட் அன்பரிடம், அண்ணே கதை என்ன ஆச்சு என்று கேட்க, அவர் என்னை தம்பி, படத்துக்கு வந்தா செல் ஆப் பண்ணிடனும், இப்படி வெளிய போயிட்டு போயிட்டு வந்தா ஏதும் புரியாது. படம் நல்ல இருக்கு பாருங்க என்று ஏதேதோ கூறினார், ஆனால் கடைசீ வரை நான் கேட்டதுக்கு பதில் வரவில்லை.

பிறகு படத்தில் லயித்தேன். முதல் சண்டை காட்சி, அதன் பிறகு வந்த குத்து பாட்டு , ஸ்டிரைக் அடிச்சே ஆகணும் என்று சுத்தும் ஹீரோ குரூப், நாயகன் நாயகி காதலில் விழும் காட்சி, அதற்காகவே உருவாக்கப்பட்ட போலீஸ் தடியடி காட்சி என்று எதிலுமே சிறிது கூட அழுத்தம் இல்லாமல் ஓட்ஸ் கஞ்சி குடிப்பது போல் சென்றது.. உக்கார முடியுமா என்று நினைத்த நேரம் இடைவேளை... ஒரே ஓட்டமா வெளிய வந்து கோக் ஒன்னு வாங்கி நடந்தால் மறுபடி செல் சிணுங்கியது...

இந்த முறை கொஞ்சம் அதிகநேரம். இடைவேளை முடிந்து அனைவரும் உள்ள போய்டாங்க. நான் கோக்கையும், பேச்சையும் முடிக்கும் நேரம் எனக்கருகே அமர்ந்திருந்த அதே நபர், தியேட்டர் முன்வாசல் வழியாக உள்ளே வந்தார். எனக்கு சின்ன அதிர்ச்சி, பிறகு அவரிடம் போய், என்ன அண்ணே உங்களுக்கும் போன் வந்ததா என்று குடைந்தேன். அவ்வளவு தான் ஒருமையில் திட்ட ஆரம்பித்தார்.. என்னை அல்ல...

இவங்கெல்லாம் எதுக்கு படம் எடுக்குறாங்க. நமக்கு எவளோ பட்டாலும் திருந்த மாட்டோம். விளம்பரம் போட்டே மொக்கை ஆக்குறாங்க, என்று இங்கே பதிவிட முடியாத ஏக வசனங்கள் வந்து விழுந்தது... அவரை அமைதிப்படுத்தி சரி இந்தபக்கமா எப்படி வந்தீங்க என்று கேட்டேன். வண்டியை எடுத்து போய்டலாம் என்று பார்த்தால் எடுக்க இடைஞ்சல், அதான் சுத்திட்டு இருக்கேன் என்று சொன்னார்.. அவர் கை காட்டிய இடத்தில், இடைஞ்சல் செய்து கொண்டு நின்றது என்னோட பைக் தான்.

வாங்க அண்ணே நான் பைக் வெளிய எடுக்கறேன், ரெண்டுபேரும் போவோம் என்று சொல்ல, அவர் நல்ல வேலை தம்பி நீ படம் பார்கவே இல்ல. வா இப்படியே ஓடிடலாம் என்று அவசரமாக ஓடினார்.

நாங்க இருவரும் வண்டியை எடுத்துக்கொண்டு முன்வாசலை தாண்டவில்லை, பார்கிங் பகுதியில் ஒரே இரைச்சல். திரும்பி பார்த்தல் ஒரு பெரிய கூட்டமே வண்டியை எடுத்துக்கொண்டிருந்தது. நான் சும்மா இல்லாம திரும்பி அவர்களிடம், என்னங்க அதுக்குள்ளே படம் முடிஞ்சதா என்று கேட்க அனைவரும் என்னை பார்த்து உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதற்கு மேல் இங்கு நின்றால் நமக்கு ஆபத்து என்று நான் வண்டியை எடுத்து விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கொசுறு: இந்த முறை கேபிள் சங்கர் அண்ணன், இந்த படத்தை பற்றி தமது விமர்சனத்தில் காரத்தை குறைத்து விட்டார். அது தான் ஏன் என்று புரியவில்லை.

9 அர்ச்சனை:

செவ்வானம் said...

ஹாய் சிம்பா,
எப்படி இருக்கீங்க?
கடைசி வரைக்கும் படத்தோட பேர சொல்லவே இல்லையே...?
சொன்னா பல பேரு தப்பிப்போமுல்ல..

செவ்வானம் said...

ஓ..ஓ.....
நினைத்தாலே இனிக்கும் படமா...
அந்த நிகழ்ச்சியை நினைத்தாலே உங்களுக்கு இனிக்கும்-னு தலைப்பு வச்சிருக்கீங்களோனு நெனச்சேன். . . :)

pappu said...

அவ்வளவு மோசமாவா இருக்குதூஊஊஉ!

செவ்வானம் said...

ஓ.....படத்தோட பேருதான் தலைப்பா......தலைப்பு அனுபவமோனு நெனச்சேனுங்கோ.....
:-D

Divyapriya said...

padathoda per kandasamy ah?

சிம்பா said...

எல்லோருமா சேர்ந்து இப்படி என்னை மொக்கை ஆக்கிடீங்களே... சரி போனா போவுது... அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...

தாரணி பிரியா said...

இந்த படத்தோட டிரைலர் பார்த்தே எங்களுக்கு எல்லாம் முடியலை :). ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க‌

அன்புடன் அருணா said...

எததனை ட்ரயிலர் பார்த்திருக்கோம்...இன்னுமா நீங்க இதையெல்லாம் நம்புறீங்க????

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

ஐயோ. நீங்களுமா சிக்கிட்டீங்க.. நாங்க தப்பிச்சு வெளியவர முடியல- கதவு எல்லாம் சாத்திட்டாங்க. இதுக்கு சத்யம் தியேட்டர்ல 300 ரூபா டிக்கெட் வேற. இந்த மாதிரி கதை எழுதும் போதே தெரியாதா படம் ஓடுமா நிக்குமா என்று.!! வாசுவின் மகனின் மன திருப்திக்காக ஒரு படம் என்று வேணால் சொல்லாம்.